புத்ராஜெயா,செப்டம்பர் 18-
நம்பிக்கை மோசடி தொடர்பில் தேடப்பட்டு வரும் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினின் மருமகன் முஹம்மது அட்லான் பெர்ஹான் – னை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM- மினால் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை என்று அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.
முகைதீனின் மருமகன் அட்லான் பெர்ஹான் – னை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு SPRM தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், அந்த நபரை தங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.
அட்லான் பெர்ஹான் – கைது செய்து, மலேசியாவிற்கு கொண்டு வருவதற்கு அவரை கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து SPRM- தேடி வருவதையும் அஸாம் பாக்கி சுட்டிக்காட்டினார்.
இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் அஸாம் பாக்கி இதனைத் தெரிவித்தார்.
நம்பிக்கை மோசடி மற்றும் லஞ்ச ஊழல் தொடர்பில் SPRM- மினால் தாம் தேடப்பட்டு வருவதாக உணர்ந்த முகைதீன் யாசினின் மருமருமகன், நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
அவரை பிடிப்பதற்கு கடந்த ஜுன் 13 ஆம் தேதி அனைத்துலக போலீஸ் பிரிவான INTERPOL உதவியை SPRM நாடியதாக அஸாம் பாக்கி தெரிவித்தார்.