10 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒருவர் பலி

சிரம்பான் ,செப்டம்பர் 18-

சிரம்பான், Caltex எண்ணெய் நிலையத்திற்கு அருகில் லிங்கக்காரன் தேங்கா செரம்பன் சாலையில் கற்களை ஏற்றி வந்த இரு லோரிகள் உட்பட பத்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஓர் ஆடவர் உயிரிழந்தார். ஒரு பெண் உட்பட மூவர் படுகாயம் அடைந்தனர்.

இன்று மதியம் நிகழ்ந்த இவ்விபத்தில் தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளான 40 வயது நபர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

லோரியின் அடியில் சிக்கிய காரின் இடிபாடுகளிலிருந்து அந்த நபரின் உடலை மீட்பதற்கு ஒன்பது பேர் கொண்ட தீயணைப்புப்படையினர், பாரந்தூக்கி இயந்திரத்தின் உதவியுடன் சுமார் இரண்டு மணி நேரம் கடுமையாக போராடியதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS