பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 18-
பன்றி இறைச்சி மற்றும் மதுபானம் விற்பனை செய்யப்படாத உணவகங்களில் Halal சான்றிதழ் கட்டாமாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரையை அமைச்சரவை நிராகரித்துள்ளது.
உணவகங்களில் Halal சான்றிதழ் என்பது அவற்றின் நடத்துநர்களின் விருப்புரிமைக்கு உட்பட்டது என்று அமைச்சரவை ஏகமனதாக முடிவு செய்துள்ளதாக சீனப்பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Halal சான்றிதழை கொண்டிருக்குமாறு எந்தவொரு உணவகத்தையும் அரசாங்கம் கட்டாயப்படுத்தாது என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.