புத்ராஜெயா,செப்டம்பர் 18-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் KLIA 1 லும், KLIA 2லும் கடமையில் ஈடுபட்டுள்ள குடிநுழைவு அதிகாரிகள், கைப்பேசியை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் மத்தியில் லஞ்ச ஊழலை துடைத்தொழிக்கும் முயற்சியாக குடிநுழைவுத்துறை மேற்பார்வையாளர்கள் உட்பட அதிகாரிகள், கைப்பேசியை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான பரிந்துரையை குடிநுழைவுத்துறையினர் ஆராய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.