மரங்கள் சாய்ந்தது தொடர்பில் 2,575 அழைப்புகள்

புத்ராஜெயா,செப்டம்பர் 19-

பலத்த காற்று, கனத்த மழையின் காரணமாக நாடு முழுவதும் மரங்கள் வேரோடு பெயர்த்துக்கொண்டு சாய்ந்த சம்பவங்களில் கடந்த ஜனவரியிலிருந்து இவ்வாண்டு ஜுலை வரை மலேசிய தீயணைப்பு, மீட்புப்படையினர் 2 ஆயிரத்து 575 அவரச அழைப்புகளை பெற்றுள்ளது என்று அறிவித்துள்ளது.

சிலாங்கூர் மாநிலமே அதிகமான அழைப்புகளை பெற்றுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலம் 441 சம்பவங்களை பதிவு செய்துள்ளது.

அதனை தொடர்ந்த பேரா 321 சம்பவங்களையும், சரவாக் 264 சம்பவங்களையும் பதிவு செய்துள்ளதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

மொத்த சம்பவங்களில் எட்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 27 பேர் காயமுற்றனர். 37 பேர் உயிர் தப்பினர் என்று தீயணைப்பு, மீட்புப்படை குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS