பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 19-
Global Ikhwan Holdings நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை தாய்லாந்து – புக்கிட் காயு ஹீத்தாம் எல்லையில் நேற்று மாலை 6.00 மணியளவில் கைது செய்த போலீசார், அந்த நிறுவனத்தின் சின்னம் கொண்ட மோட்டார் ஹோம் எனப்படும் தங்கும் வசதி கொண்ட இரண்டு ஆடம்பர வாகனங்களைக் கைப்பற்றினர்.
அந்த இரண்டு வாகனங்களையும் அவ்விடத்திலேயே போலீசார் பறிமுதல் செய்ததாக போலீஸ் படைத் தலைவர்டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார். .
வடக்கு மண்டல எல்லை உளவு புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் பயனாக இந்த கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள 20 சமூக நல இல்லங்களில் துன்புறுத்தலுக்கு ஆளானதாக நம்பப்படும் 402 சிறார்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் Global Ikhwan Holdings நிறுவனத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக வருவதாக ஐஜிபி தெரிவித்தார்.