கோலாலம்பூர், செப்டம்பர் 19-
கனத்த மழையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களில் வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கெடா, பினாங்கு மற்றும் பெர்லிஸ் மாநிலங்களில் இதுவரையில் 4 ஆயிரத்து 223 பேர், 42 நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெடா மாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.. அந்த மாநிலத்தில் 2 ஆயிரத்து 882 பேர் நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்து இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.