பாகன் டத்துக், செப்டம்பர் 19-
நீர் பெருக்கினால் பேரா, பாகன் டத்துக் , பாகன் சுங்கை புருங் பகுதியில் மக்களின் வழக்கமான நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை முதல் படகுத்துறையில் பேரலைகள் மேலோங்கியிருப்பதால் சுற்றுலாத் துறை வெகுவாக பாதித்துள்ளதாக சுற்றுலாப் பயணிகளுக்கான படகு சேவையை நடத்தி வரும் Nine Island Agency Sdn.Bhd நிறுவனத்தின் நிர்வாகி கோர் வாங் கியாங் தெரிவித்தாார்.
சுற்றுப்பயணிகளை இறக்குவதற்கு பயன்படுத்தப்படும் படகுத்துறையின் படிக்கட்டுகளும் பேரலையின் காரணமாக சேதமுற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்