சீனாவிற்கு மாமன்னர் அதிகாரத்துவ வருகை

பெய்ஜிங்,செப்டம்பர் 19-

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று தொடங்கி, வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை சீனாவிற்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ளார்.

மாமன்னரின் சீனா, வருகையானது, பத்து ஆண்டுகளுக்கு பிறகு மேற்கொள்ளப்படும் வருகையாகும். மலேசியாவிற்கும் சீனாவிற்கும் தூதரக உறவு மலர்ந்து 50 ஆண்டு கால நிறைவு விழாவையொட்டி இரு நாடுகளுக்கும் இடையிலான இரு வழி உறவை வலுப்படுத்தும் வகையில் மாமன்னரின் இந்த வருகை அமைந்துள்ளதாக சீனாவிற்கான மலேசியத் தூதர் டத்தோ நார்மன் முகமட் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டு முற்பகுதியில் மாமன்னர் பொறுப்பை ஏற்றப்பின்னர் சுல்தான், இப்பராஹிம் சீனாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது அதிகாரத்துவ வருகை இதுவாகும்.

WATCH OUR LATEST NEWS