பல்கலைக்கழக கட்டணத்தை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்து

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 19-

பொது உயர்கல்விக்கூடங்களுக்கான கல்வித் தவணைக் காலம் தொடங்கியுள்ள வேளையில் உயர்கல்வி வாய்ப்பிற்கு இடம் கிடைத்துள்ள ஏழை மற்றும் வசதிகுறைந்த மாணவர்களை முதலில் ஏற்றுக்கொள்ளுமாறு அனைத்து பொது பல்கலைக்கழகங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட மாணவர்களின் பல்கலைக்கழக பதிவிற்குரிய கட்டணத்தை வசூலிப்பதில் சிரத்தை காட்டுவதைக் காட்டிலும் முதலில் அந்த மாணவர்களை ஏற்றுக்கொள்ளுமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தை உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஜாம்ப்ரி அப்துல் காதிர் கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில் அந்த மாணவர்களின் பதிவுக்கட்டணத்தை சற்று ஒத்திவைக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நிதி நெருக்கடி காரணமாக எந்தவொரு வசதிகுறைந்த மாணவரும் தங்களுக்கான பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்பை இழந்து விடக்கூடாது என்று அவர் நினைவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS