செரம்பன், செப்டம்பர் 19-
ஆதரவற்ற சமூக நல இல்லங்களிலிருந்து சிறார்கள் மீட்கப்பட்ட சம்பவத்தில் Global Ikhwan நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் மூன்று நபர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
நெகிரி செம்பிலான்,குவாலா பிலாஹ் – வைச் சேர்ந்த அந்த மூவரும் இன்று சிரம்பான், செஷன்ஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கோலப்பிலாவில் உள்ள ஒரு சமயப்பள்ளியில் கடந்த 2022 க்கும் 2023 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஐந்து சிறார்களை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்த மூன்று உதவி போதனையாளர்களுக்கு எதிராக 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
21 வயதுமுஹம்மது ஹபிப் நோ முகமது ஜைரி, 20 வயது முஹம்மது குனைஸ் ஃபாத்தி காபில் மற்றும் 22 வயது அஹ்னாத் நட்ஸ்ஃபுல் இஷாம் அஜிசன் ஆகிய மூன்று இளைஞர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது..
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகைசெய்யும் 2017 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்த மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்..