கோலாலம்பூர், செப்டம்பர் 19-
அந்நிய நாட்டவர்களை சோதனையின்றி நாட்டிற்குள் விடுவதற்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் செட்டிங் முகப்பிடம் அமைத்து மோசடி புரிந்ததாக குடிநுழைவுத்துறை அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டில் இரண்டு முக்கிய அதிகாரிகளுக்கு தடுப்புக்காவல் அனுமதி பெறப்பட்டுள்ளது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்ட அந்த இரண்டு முதிர் நிலை அதிகாரிகள் இன்று காலையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவர்களுக்கான தடுப்புக்காவல் அனுமதியை SPRM பெற்றுள்ளது.
அந்த இரண்டு அதிகாரிகளை இன்று தொடங்கி வரும் செப்படம்பர் 23 ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.