ஜார்ஜ் டவுன், செப்டம்பர்
பினாங்கு, ஜார்ஜ்டவுன்,லெபு கெரேஜா, பினாங்கு பெரனாகன் மாளிகை வளாகத்தில் ராட்ஷ மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு கார் மீது விழுந்ததில் உயிரிழந்து சீன நாட்டைச் சேர்ந்த இரண்டு சுற்றுப்பயணிகள் அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்..
இச்சம்பவத்தில் 69 வயதுடைய தந்தையும், 36 வயதுடைய மகளும் உயரிழந்துள்ளனர் என்று அடையாளம் காணப்பட்டதாக பினாங்கு திமூர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ரஸ்லான் அப்துல் ஹமீத் தெரிவித்தார்..