அந்த ஆடவரை போலீஸ் கைது செய்து

குவாந்தன்,செப்டம்பர் 19-

சுற்றியும் தீயை மூட்டியப்பின்னர் தனது மகனை கொளுத்தப் போவதாக மிரட்டல் விடுத்து வீடியோ காணொலியை வெளியிட்ட நபரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

நெருப்புக்கு மத்தியில் அந்த சிறுவன் கத்தி அழறும் காட்சியைக் கொண்ட காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டதாக குவந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர் நேற்று இரவு 10.30 மணியளவில் மாரானில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளி முன்புறத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் Nissan Grand Livina- ரக காரில் பயணித்துக்கொண்டு இருந்த போது போலீசார் வளைத்துப்பிடிக்கப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS