கைதியை பிடிப்பதற்கு தீவிர வேட்டை தொடங்கப்பட்டது

கோலாலம்பூர், செப்டம்பர் 19-

சுங்கைபூலோ மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற வந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றது தொடர்பில் அந்த நபரை பிடிப்பதற்கு சிறைச்சாலை இலாகா தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளது.

கலைக்குமார் ஆனந்தன் என்ற 27 வயதுடைய அந்த கைதியை பிடிப்பதற்கு மலேசியச் சிறைச்சாலை இலாகா, போலீஸ் துறையின் ஒத்துழைப்பை நாடியுள்ளதாக அவ்விலாகா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நபரை பார்த்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்புகொள்ளுமாறு அவ்விலாகா பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS