பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 19-
மாது ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படும் கோலாலம்பூரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர், 60 ஆயிரம் வெள்ளி இழப்பீடுத் தொகையை வழங்க வேண்டும் என்று நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
மிக ஆபாசமாக பார்ப்பது, பேசுவது முதலிய தொல்லைகளை அந்த மாதுவிற்கு சம்பந்தப்பட்ட ஆடவர் கொடுத்து வந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட மாதுவையும், அந்த ஆடவரையும் விசாரணை செய்ததில் அந்த மாதுவிற்கு 60 ஆயிரம் வெள்ளி இழப்பீட்டுத்தொகையை கொடுக்கும்படி நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.