பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 19-
பலத்த காற்று, 3.5 மீட்டர் உயரம் வரை பேரலைகள் காரணமாக குவாலா கெடா படகுத்துறையில் லங்காவிற்கான பெர்ரி சேவை வரும் சனிக்கிழமை வரையில் ரத்து செய்யப்பட்டள்ளது.
இந்நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் பள்ளி தவணைக்கால விடுமுறை முடிவடையும் நிலையில் லங்காவிற்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள , சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்ப முடியாமல் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
இதன் தொடர்பில் பலர், லங்காவியிலிருந்து வீடு திரும்புவதற்கு பல்வேறு மாற்று வழிகளை கண்டு பிடித்து வருகின்றனர். பலர், தங்கள் வாகனங்களை குவாலா கெடா படகுத்துறையில் நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் குவாலா கெடா – விற்கு பெர்ரி சேவை இல்லாத நிலையில் பலர் லங்காவியிலிருந்து கோல பெர்லிஸிற்கு வந்து, பின்னர் வாடகை கார் மூலம் குவாலா கெடா – விற்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.