ஷா ஆலம், செப்டம்பர் 19-
மலேசிய குடிநுழைவுத்துறை அதிகாரிகள், தங்கள் கடமையின் போது கைப்பேசியை பயன்படுத்தக்கூடாது என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM முன்மொழிந்துள்ள பரிந்துரை, ஏற்கனவே அமலாக்கத்தில் உள்ளது என்று தீபகற்ப மலேசிய குடிநுழைவுத்துறை பணியாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியிட்டப்பட்ட சுற்றறிக்கையில் கைபேசி பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து அமலில் உள்ளது. எனினும் அந்த அமலாக்கத்தை மேலும் கடுமையாக்கப்பட வேண்டும் என்று அந்த தொழிற்சங்கம் பரிந்துரை செய்துள்ளது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அந்நிய நாட்டவர்கள் சோதனையின்றி, நாட்டிற்குள் நுழைவதற்கு குடிநுழைவுத்துறை முகப்பிடங்களில் அதிகாரிகள் Setting முறையை அமைத்து ஊழல் புரிந்தது தொடர்பில் SPRM முன்மொழிந்த பரிந்துரை குறித்து அந்த தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் முகமது யுசல்மான் அகமது எதிர்வினையாற்றியுள்ளார்.