கங்கர் , செப்டம்பர் 19-
ஆயிரம் அடி ஆழத்தில் நீந்தக்கூடிய தனித்துவமான ஆற்றலை கொண்ட அரிய வகை DOLPHIN மீன் ஒன்று, இறந்த நிலையில், கங்கர் , குவாலா பெர்லிஸ், பந்தாய் கொரோங் கடலில் கரை ஒதுங்கி கிடந்தது இன்று காலையில் கண்டு பிடிக்கப்பட்டது.
அந்த அரிய வகை மீன், அதிகாலை 1.49 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து மீன்வளத்துறை காலை 8 மணியளவில் அந்த DOLPHIN மீனின் உடலை மீட்டதாக பெர்லிஸ் மாநில இயக்குநர் முகமது ரோஷைசத் முஸ்தபா தெரிவித்தார்.
90 முதல் 120 கிலோ எடை கொண்ட அந்த DOLPHIN, 26 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்து இருக்கக்கூடும் என்பதை அதன் உடலில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.