புத்ராஜெயா,செப்டம்பர் 19-
அடி, உதை, சூடு என சித்ரவதைக்கு ஆளானதாக கூறப்படும் Global Ikhwan நிறுவனத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள 20 சமூக நல இல்லங்களிலிருந்து 402 சிறார்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை விசாரணை மேற்கொள்வதற்கு அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் கூறினார் தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணையின் வாயிலாக சிறார்களை பாதுகாப்பதற்கும், அவர்களின் நலன் பேணப்படுவதற்கும் மிகச்சிறந்த சட்டங்களை உருவாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சமய அமலாக்கத்திற்கு எதிராக மேற்பார்வை அதிகாரிகள் ஒரு தலைபட்சமான போக்கை கொண்டு இருப்பார்களேயானால், இது போன்ற சூழ்நிலைகளில் சிக்கும் எந்தவொரு குழந்தையையும் காப்பாற்ற முடியாது என்று இன்று தனது X பதிவில் அசாலினா ஓத்மான் குறிப்பிட்டுள்ளார்.