கோலாலம்பூர், செப்டம்பர் 19-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அந்நிய நாட்டவர்கள் எவ்வித சோதனையுமின்றி நாட்டிற்குள் அனுமதிக்கும் செட்டிங் முறை முகப்பிட ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மேலும் இரண்டு குடிநுழைவு அதிகாரிகளை கைது செய்துள்ளனர்.
அவ்விரு அதிகாரிகளும், நேற்று குடிநுழைவு இலாகா அலுவலகத்தில் கைது செய்யப்பட்டதாக SPRM வட்டாரம் தெரிவித்தது.
40 வயது மதிக்கத்தக்க ஓர் அதிகாரியின் ஒத்துழைப்புடன் 49 குடிநுழைவுத்துறை அதிகாரிகள், செட்டிங் முகப்பிட மோசடியில் சிக்கியுள்ளதை SPRM நேற்று அம்பலப்படுத்தியிருந்தது..
நேற்று அதிகாலை 3 மணி மற்றும் பிற்பகல் 5.40 மணியளவில் 30 வயது மதிக்கத்தக்க அந்த இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.