பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 19-
நாட்டில் அடுத்த ஆண்டு ஜுன் மாதத்திற்குள் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆட்குறைப்பு செய்யப்படலாம் என்று சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ கோடிகாட்டியுள்ளது.
ஆட்குறைப்பு செய்யப்படும் இந்த எண்ணிக்கை , கடந்த ஆண்டு ஆட்குறைப்பு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கையை விட இரு மடங்காக அதிகரிக்கலாம் என்று சொக்கோவின் வேலை வாய்ப்பு காப்பீட்டு அமைப்பான EIS தலைவர் அசிர்ருவான் அரிஃபின் தெரிவித்துள்ளார்.
இது சாதாரண சூழ்நிலைகளின் அடிப்படையிலான கணிப்பாகும். பணவீக்கம் அதிகரிப்பு, தொற்று நோய் பரவல் முதலிய காரணங்களினால் பணி நீக்கம் செய்யப்படுகின்றவர்களின் எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அவர் விளக்கினார்