IND vs BAN: இது முத்துப்பாண்டி கோட்டை.. இனிமே நாங்கதான்.. தெறிக்கும் அஸ்வின் – ஜடேஜா மீம்ஸ்!

சென்னை: இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 339 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய அஸ்வின், ஜடேஜா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

பொல்லாதவன் திரைப்படத்தில் தனுஷை பற்றி பெரிய தாதாவான செல்வன், “அந்த பையனுக்கு பயமில்ல” என்று குடும்பத்திற்கு முன் சொல்வார். இந்த டயலாக்கை ஜெய்ஸ்வாலுடன் ஒப்பிட்டு, மீம் ஒன்றை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். நடப்பாண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியல் ஜெய்ஸ்வால் 2வது இடத்தில் இருக்கிறார். 12 இன்னிங்ஸ்களில் சேர்த்து 796 ரன்களை விளாசியுள்ளார். இந்த இரு புகைப்படங்களையும் ஒப்பிட்டு, “அந்த பையனுக்கு பயமில்ல” என்று ஜெய்ஸ்வாலை பார்த்து சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அடிபோலி.

எம்.குமரன் படத்தில் ஒருவரை முகத்தில் குத்தி நடிகர் விவேக் சாய்த்துவிடுவார். அதன்பின், “நம்ம அள்வோ ஸ்ட்ராங்கா.. இல்ல.. இவனுங்க அள்வோ விக்கா” என்று குழம்புவார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் ரோஹித் சர்மா, சுப்மன் கில் மற்றும் விராட் கோலியின் விக்கெட்டை வங்கதேசம் அணி எளிதாக வீழ்த்தியது. இதனால் விவேக்கை வங்கதேச அணியாக மாற்றி குழம்புவதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஒன்னுமே புரியல உலகத்துல மொமண்ட்.

ராயன் படத்தில் துரையை கொலை செய்வதற்காக தனுஷ், சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம் மூவரும் தயாராக நிற்பார்கள். அப்போது துரை நாற்காலியில் அமர்ந்து மிரண்டு போய் பார்ப்பார். அதனை அப்படியே தனுஷை அஸ்வினாகவும், சந்தீப் கிஷனை ஜடேஜாவாகவும், ஜெய்ஸ்வாலை காளிதாஸாகவும் மாற்றி, துரை கதாபாத்திரத்தை வங்கதேச அணியாகவும் மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் ராயனும் வந்துட்டான் தீயா மொமண்ட்.

டாக்டர் ஸ்ட்ரேஞ் கதாபாத்திரம் ஏராளமான கைகள் இருப்பது போல் மேஜிக் செய்யும். அதனை அப்படியே அஸ்வினின் முகத்தை மாற்றிவிட்டு, அனாலிஸ்ட், ஸ்பின்னர், பேட்ஸ்மேன், செஸ் பிளேயர், யூட்யூபர், பிஎச்டி ( எம்சிசி புக் ), ட்விட்டர் ட்ரால், சயிண்டிஸ்ட், நான் ஸ்ட்ரைக்கர் ரன் அவுட் ஸ்பெஷலிட்ஸ் என்று ஒரு கைக்கும் ஒரு திறமையை இருப்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சகலகலா வல்லவன் மொமண்ட்.

WATCH OUR LATEST NEWS