தேசிய வரலாற்று மன்றம் அமைப்பதற்கு இணக்கம்

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 20-

நாட்டின் நிலைத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்க செய்யக்கூடிய வரலாற்று உண்மை தரவுகளை திசைதிருப்பக்கூடிய சம்பவங்களை கையாளுவதற்கு தேசிய வரலாற்று மன்றத்தை அமைப்பதற்கான அவசியத்திற்கு தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.

வரலாற்றுத் தகவல்கள் திசைதிருப்பப்பட்டு, தவறாக வியக்கியாணப்படுத்தப்படுவதையும், முரண்பாடான தகவல்கள் திணிக்கப்படுவதையும் மலேசிய வரலாற்று மன்றம் தடுக்கும் என்று தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தெரிவித்தார்.

இந்த வரலாற்று மன்றத்தில் வரலாற்று நிபுணர்கள், கல்விமான்கள் மற்றும் வரலாற்று கூறுகளை நன்கு அறிந்து வைத்திருக்கக்கூடிய அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் பொறுப்பாளர்கள் இடம் பெறுவர் என்று அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS