கோலாலம்பூர், செப்டம்பர் 20-
அடி, உதை, சூடு என சித்ரவதைக்கு ஆளானதாக கூறப்படும் Global Ikhwan நிறுவனத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள 20 சமூக நல இல்லங்களிலிருந்து 402 சிறார்கள் மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியின் மேலும் ஒரு மகன் மற்றும் Al- Arqam முன்னாள் தலைவர்ஆஷாரி முகமது – டின் மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருப்பதை போலீஸ்படைத் தலைவர் டான்ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் இன்று றுதிப்படுத்தினார்.
Global Ikhwan நிறுவனம் தொடர்பில் பகாங் தெமர்லோ, நெகிரி செம்பிலான் போர்ட்டிக்சன், கிளந்தான் பெங்கலன் செப்பா ஆகியவற்றில் நான்கு இடங்களில் போலீசார் மேற்கொண்டனர். இந்த சோதனையில் 7 பேர் பிடிபட்டனர். அவர்களில் 32 வயதுடைய மேற்கண்ட இருவரும் அடங்குவர் என்று ஐஜிபி விளக்கினார்.