ஜார்ஜ் டவுன், செப்டம்பர் 20-
பினாங்கில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொக்க உதவித் தொகையை வழங்குவதற்கு மாநில அரசாங்கம் உத்தேசிக்கவில்லை என்று முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்தார்.
எனினும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாநில மக்களின் நலனை காப்பதற்கு அவர்களுக்கு எந்தெந்த ரூபத்தில் உதவ முடியும் என்பதை மாநில அரசாங்கம் ஆராயும் என்று அவர் குறிப்பிட்டார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை வரையறுப்பது என்பது கடிமான ஒன்றாகும். அதேவேளையில் ரொக்க உதவித் தொகையை வழங்குவதற்கான எந்தவொரு கொள்கையும் பினாங்கு அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
முன்பு நடைமுறைப்படுத்தப்பட்ட அணுகுமுறையைப் போல அவர்களுக்கான உரிய உதவிகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.