பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 20-
வங்காளதேசத்தில் தங்கத்தை கடத்திய குற்றத்திற்காக அந்த நாட்டின் சிறையில் தண்டனைக் காலத்தை அனுபவித்த இரண்டு மலேசியர்கள், தண்டனை முடிந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வங்காளதேச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு ஏற்ப அந்த இரண்டு மலேசியர்களின் பெயர்களை வெளியிட இயலாது என்று விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த இரண்டு மலேசியர்களும் விரைவில் தாயகம் திரும்புவர் என்று அது குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு வங்காளதேசத்தில் 45 கிலோ தங்கத்தை கடத்திய குற்றத்திற்காக அந்த இரண்டு மலேசியர்களுக்கும் அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அந்த நாட்டில் ஆயுள் தண்டனை என்பது 30 ஆண்டு காலமாகும்.
இதே குற்றத்தை புரிந்த மேலும் மூன்று மலேசியர்கள் அந்த நாட்டில் தொடர்ந்து சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர் என்று விஸ்மா புத்ரா குறிப்பிட்டது.