கோலாலம்பூர், செப்டம்பர் 20-
கடந்த ஆண்டு மே மாதம் 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக இரண்டு ஆடவர்களுக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தலா 11 ஆண்டு சிறை மற்றும் 2 பிரம்படித் தண்டனை விதித்தது.
ஒரு லோரி ஓட்டுநரான 27 B. சத்தியா மற்றும் கட்டுமான மேற்பார்வையாளரான அவரின் நண்பர் 31 வயது T. கணேசன் ஆகியோர் பாலியல் குற்றம் இழைத்துள்ளனர் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி இஸ்ரலிஸாம் சனுசி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
சத்தியாவும், கணேசனும் கடந்த 2023 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி காலை 5.20 மணியளவில் கோலாலம்பூர் ஜாலான் துன் ரசாக்கில் ஒரு கேளிக்கை மையத்திற்கு அருகில் Honda Citi காருக்குள் 18 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்..