கோலாலம்பூர், செப்டம்பர் 20-
லஞ்ச ஊழல் தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் ஒரு நபரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தேடி வருகிறது.
மணிராஜா பச்சையப்பன் என்ற 55 வயதுடைய நபரின் ஆகக்கடைசி முகவரி எண் 24,லெபு அம்பாங் கோலாலம்பூர் என்பதாகும்.
சம்பந்தப்பட்ட நபரை பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடத்தை தெரிந்தவர்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை அதிகாரி முஹம்மது சியாமில் முகமது அலி- யுடன் தொடர்புகொள்ளுமாறு SPRM கேட்டுக்கொண்டுள்ளது.