தோட்டத் தொழிற்சங்கத்தின் பகாங் மாநில பயிற்சிப் பட்டறை

பகாங்,செப்டம்பர் 20-

தொழிற்சங்கத்தின் முக்கியத்துவத்தையும், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையும், அங்கத்தினர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொழிற்சங்க பதிவு இலாகாவும், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் இணைந்து மாநில தோறும் பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் இன்று வெள்ளிக்கிழமை பகாங், குவந்தானில் பகாங் மாநிலத்திற்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

இந்த பயிற்சிப் பட்டறையில் தொழிற்சங்கத்தில் அங்கத்தினர்களாக உள்ள 50 க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சிப்பட்டறையை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜி. சங்கரன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றினார்.

இப்பயிற்சி பட்டறையில் தொழிற்சங்க பதிவு இலாகா, தொழிலாளர் இலாகா, தொழில் உறவு இலாகா, சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ ஆகியவற்றின் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டு, தொழிலாளர் தொடர்புடைய பல சட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

இந்தப் பட்டறையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய டத்தோ ஜி. சங்கரன், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் அங்கத்தினர்கள் அனைவரும், தொழிற்சங்க சட்ட விதிகளை அறிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையேல், தொழிற்சங்க சட்டவிதிகளை மீறும் பட்சத்தில் தொழிற்சங்க பதிவு இலாகா நமது மீது நடவடிக்கை எடுப்பதற்கு எல்லா உரிமையும் உண்டு என்று என்பதை தெளிவுபடுத்தினார்.

ஆகவே தோட்டங்களில் செயல்படும் தொழிற்சங்க செயலவையினர், சட்டத்திற்கு உட்பட்டு அங்கத்தினர்களை வழிநடத்த வேண்டும். கடந்த 70 ஆண்டு காலமாக தோட்டத் தொழிற்சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது அந்த நற்பெயரை அங்கத்தினர்கள் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்று டத்தோ சங்கரன் தமது உரையில் கேட்டுக்கொண்டார்.

இந்த பயிற்சிப்பட்டறையில் பகாங் மாநில செயலாளர் யுவனேஸ்வரன், மாநிலத் தலைவர் ஆறுமுகம் மற்றும் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் A. நவமுகுந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Captionடத்தோ ஜி. சங்கரன்,
பொதுச் செயலாளர் NUPW

WATCH OUR LATEST NEWS