குவாந்தன்,செப்டம்பர் 20-
கடந்த ஜுன் மாதம் குதிரை லாயத்தில் கும்பல் ஒன்றுடன் கூட்டாக சேர்ந்து பகாங் அரச பேராளர் ஒருவர், ஆடவர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான போலீசாரின் விசாரணை அறிக்கை தற்போது துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்தில் உள்ளது என்று பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.
மேல்நடவடிக்கைக்காக துணை பப்ளிக் பிராசியூட்டர் அலுவலகத்தின் அடுத்த உத்தரவுக்காக போலீஸ் துறை காத்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பகாங் பேராளர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த விவகாரத்தில் சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்பதால் எந்தவொரு சமரசத்திற்கும் இடமின்றி இவ்விவகாரத்தில் வெளிப்படையான விசாரணையை போலீஸ் துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தெங்கு மஹ்கோத்தா பகாங் அண்மையில் உத்தரவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.