ஞானராஜா பயன்படுத்தப்பட்டதைத் லிம் குவாங் எங் ஒப்புக்கொண்டார்

கோலாலம்பூர், செப்டம்பர் 20-

லிம் குவான் எங்கிடம் பணத்தை ஒப்படைப்பதற்கு தொழில் அதிபர் ஜி. ஞானராஜா- வை பயன்படுத்துவதற்கு பினாங்கின் முன்னாள் முலமைச்சரான லிம் ஒப்புக்கொண்டார் என்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

பினாங்கு கடலடி சுரங்கப்பாதைத் திட்டத்தில் பினாங்கு முதலமைச்சர் என்ற முறையில் 33 லட்சம் வெள்ளி லஞ்சத்தை பெற்றதாக லிம் குவான் எங்கிற்கு எதிராக நடைபெற்று வரும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு மீதான வழக்கு விசாரணையில் Consortium Zenint Construction Sdn. Bhd. நிறுவனத்தின் இயக்குநர் டத்தோ சாருல் அகமது முகமட் சுல்கிஃப்லி மேற்கண்டவாறு சாட்சியம் அளித்தார்.

தம்மிடம் ஒப்படைக்கப்படும் லஞ்சப்பணத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கண்டு பிடித்து விடக்கூடாது என்பதற்காக அந்த பணத்தை தொழில் அதிபர் ஜி. ஞானராஜா- மூலம் ஒப்படைப்பதற்கு லிம் குவான் எங் ஒப்புதல் அளித்தார் என்று டத்தோ சாருல் அகமது தமது சாட்சியத்தில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS