கோலாலம்பூர், செப்டம்பர் 20-
மலேசியாவின் பொருளாதார அடிப்படைகள் குறித்து உலகளாவிய பார்வையை மடானி அரசாங்கம் வெற்றிகரமாக மாற்றியிருப்பதை வலுவான ரிங்கிட் மதிப்பு நிரூபிக்கிறது என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
இன்று காலை 10.20 மணி நிலவரப்படி அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் 4.19 என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இது ஆண்டு இறுதியில் ரிங்கிட் 4.50 – ஐ எட்டும் என்ற முந்தைய கணிப்பை பொய்யாக்கக் கூடியதாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று முக்கிய கட்டமைப்புகளபன – மடானி பொருளாதாரம், / புதிய தொழில்துறை பிரதான திட்டம் 2030 / மற்றும் தேசிய ஆற்றல் மாற்றம் பாதை வரைபடம் ஆகியவை குறுகிய காலத்திற்குள் நாட்டில் விரைவான மாற்றங்களுக்கு வழிவகுத்ததுள்ளதாக அரசாங்கப் பேச்சாளரான ஃபஹ்மி ஃபட்சில் குறிப்பிட்டார்.
இரண்டு ஆண்டுகளில், மடானி அரசாங்கம் மலேசியாவை சரியான பாதையில் வெற்றிகரமாக கொண்டு சென்றுள்ளதாக தொடர்பு துறை அமைச்சின் மாதாந்திர கூட்டத்திற்கு தலைமையேற்றப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் ஃபஹ்மி ஃபட்சில் இவ்வாறு தெரிவித்தார்.