பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 21-
கிள்ளான், கோலக்கிள்ளான், பூலாவ் கெத்தாம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள நீர்ப்பெருக்கு தற்போது கட்டுப்பாட்டில் இருப்பதாக கிள்ளான் மாவட்ட பேரிடர் நிர்வாக மேலாண்மைத் தலைவர் அம்ரி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
விரும்பத்தகாத புதிய சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. இன்று காலை 10.40 மணி வரை நீர்ப்பெருக்கு கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்ப்பெருக்கினால் விஷத்தன்மை கொண்ட பாம்புகள் வெள்ளத்தில் மிதந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 6.30 மணி வரை நீர்ப்பெருக்கு 5.8 மீட்டர் உயரத்திற்கு மேலோங்கியிருந்தது.
கோலக்கிள்ளான் படகுத்துறையில் ஏற்பட்ட நீர்ப்பெருக்கு தற்போது வடியத் தொடங்கியுள்ளதாக அம்ரி இஸ்மாயில் குறிப்பிட்டார்