ஒற்றுமை அரசாங்கத்தை ஜனநாயக முறை வாயிலாகவே வீழ்த்தப்படும்

குளுவாங் , செப்டம்பர் 21-

ஒற்றுமை அரசாங்கத்தை ஜனநாயகத்தின் வாயிலாகவே வீழ்த்தப்பட வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் உறுதி பூண்டுள்ளதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் சூளுரைத்துள்ளார்.

அதன் தொடக்க கட்டம்தான் இடைத் தேர்தல்கள் ஆகும். வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறவிருக்கு ஜோகூர், Mahkota சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலிருந்து வீழ்த்தப்படுவதற்கான இந்த ஜனநாயக முறை தொடங்கப்பட வேண்டும் என்று முகைதீன் வலியுறுத்தினார்.

நடப்பு அரசாங்கம் கவிழ்ந்து விடும் என்ற பயம் தற்போது கவ்விக்கொண்டு இருக்கிறது. அண்மையில் தாம் ஆற்றிய உரையினால் தம் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதன் மூலம் இந்த பயம் அவர்களை வாட்டத் தொடங்கி விட்டது என்று முகைதீன் குறிப்பிட்டார்.

Mahkota இடைத் தேர்தலையொட்டி நேற்று குளுவாங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் பிரதமருமான முகைதீன் மேற்கண்ட நினைவுறுத்தலை விடுத்துள்ளார். .

WATCH OUR LATEST NEWS