கெடா மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

கோலாலம்பூர், செப்டம்பர் 21-

கெடா மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள வேளையில் பினாங்கில் இந்த எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் பெர்லிஸ், சிலாங்கூர் மற்றும் பேரா ஆகிய மாநிலங்களில் வெள்ள நிலைமையில் எவ்வித மாற்றமும் இல்லை.

கெடா மாநிலத்தில் உள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை 7,492 பேரா அதிகரித்து இருப்பதாக மாநில சமூக நல இலாகா வெளியிட்டள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS