மஞ்சங், செப்டம்பர் 23-
லோரி ஒன்று, டிரெய்லர் லோரியின் பின்புறம் மோதியதில் அதன் ஓட்டுநரும், உதவியாளரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.33 மணியளவில் பேரா,மஞ்சங், சித்தியவான் அருகில் WCE மேற்குகரையோர நெடுஞ்சாலையின் 202 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
லோரி ஓட்டுநரான 48 வயது ரசாலி சஹாத் மற்றும் உதவியாளரான 28 வயது முஹம்மது அலிசாத் நாராய் ஆகியோர் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.
அலுவலகத் தளவாடங்களை ஏற்றிச்சென்ற 5 டன் லோரி, வேகக்கட்டுப்பாட்டை இழந்து, டிரெய்லர் லோரியின் பின்புறம் மோதியதாக கூறப்படுகிறது.