சந்தேகப் பேர்வழிக்கு 7 நாள் தடுப்புக்காவல்

புத்ராஜெயா,செப்டம்பர் 23-

சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை முகப்பிடங்களில் அந்நிய நாட்டவர்கள் சோதனையின்றி நாட்டிற்குள் நுழைவதற்கு செட்டிங் முகப்பிடங்களில் நிகழ்ந்த மிகப்பெரிய ஊழல் மோசடிக்கு மூளையாக இருந்து செயல்பட்டதாக நம்பப்படும் நபரை 7 நாள் தடுத்து வைப்பதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, நீதிமன்ற அனுமதியை பெற்றுள்ளது.

இன்று காலையில் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க அந்த நபரை வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு மாஜிஸ்திரேட்முகமது சப்ரி இஸ்மாயில்அனுமதி அளித்தார்.

குடிநுழைவுத்துறை அதிகாரிகளை தன்வசமாக்கிக் கொண்டு செட்டிங் முகப்பிடங்கள் உருவாகுவதற்கு காரணகர்தாவாக இருந்தவர் என்று நம்பப்படும் உள்ளூரைச் சேர்ந்த அந்த நபர், கடந்த புதன்கிழமை நெகிரி செம்பிலான் SPRM அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் KLIA1 மற்றும் KLIA 2 ஆகிய முனையங்களின் வாயிலாக அந்நிய நாட்டவர்கள் எவ்வித சோதனையின்றி மிக சுலபமாக நுழைவதற்கு உள்ளூர் ஏஜெண்டுகளுக்கு அந்த நபர் வலது கரமாக விளங்கியுள்ளார் என்று SPRM வட்டாரம் கூறுகிறது.

WATCH OUR LATEST NEWS