ஏஜி மௌனமாக இருக்கக் கூடாது

கோலாலம்பூர், செப்டம்பர்

மாற்றுத்திறனாளி ஒருவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் அரச பேராளரின் போலீஸ் மெய்க்காவலருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதில் ஏன் இவ்வளவு காலதாமதம் காட்டப்படுகிறது என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா ஶ்ரீநிவாசன் வினவியுள்ளார்.

காது கேளாதவரான அந்த e-hailing ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படும் அந்த மெய்காவலர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என்று நெருக்குதல் ஏதும் வந்துள்ளதா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஓங் இன் கியோங் என்ற அந்த மாற்றுத் திறனாளி கொடுத்த புகாரை மீட்டுக் கொள்வதற்கு முயற்சிகள் ஏதும் மேற்கொள்ளப்படுகிறதா என்றும் அம்பிகா வினவினார். இவ்விவகாரத்தில் சட்டத்துறைத் தலைவருக்கு யார் நெருக்குதல் கொடுத்தது, இதற்கு ஏன் அவர்கள் பயப்பட வேண்டும் எனவும் அம்பிகா வினவினார் .

மேற்குறிப்பிட்ட மாற்றுத்திறனாளியை தாக்கியது ஜோகூர் மாநில இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமினின் மெய்க்காப்பாளர் எனத் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் தாராளமாக விசாரணை செய்யலாம் என அம்பிகா தனது அறிக்கையல் குறிப்பட்டு இருந்தார்.

இதனிடையே இவ்விவகாரத்தில் சட்டத்துறை தலைவர் மௌனமாக இருக்கக் கூடாது என SUHAKAM எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்விவகாரத்தில் அந்த மாற்றுத்திறனாளியின் புகார் அலட்சியப்படுத்தக்கூடாது என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS