பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 23-
மலேசிய Bowling விளையாட்டுடன் இரண்டறக் கலந்தவரான டத்தோ டாக்டர் பி.எஸ். நாதன் காலமாானர். மலேசிய Bowling விளையாட்டு சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்று, கடந்த ஆண்டு மே மாதம் பதவி விலகும் வரையில் மலேசிய Bowling விளையாட்டுக்கு டத்தோ டாக்டர் பி.எஸ். நாதன்-தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தியவர். அவருக்கு வயது 90.
டத்தோ டாக்டர் பி.எஸ். நாதன் நேற்று மாலையில் காலமானதாக மலேசியா டென்பின் பவுலின் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
டத்தோ டாக்டர் பி.எஸ். நாதன்- னின் பெரும் முயற்சியில் கடந்த 1974 ஆம் ஆண்டு மலேசிய Bowling சங்கம் அமைக்கப்பட்டது. டாக்டர் நாதனின் தொலைநோக்குப்பார்வை, மலேசிய பாவ்லிங் விளையாட்டுத்துறை, உலகத் தரத்திற்கு உயர்த்தப்பட்டதாக அந்த சங்கம் கூறியது. மலேசியா மட்டுமின்றி உலக பாவ்லிங் விளையாட்டுக்கு டாக்டர் நாதன் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
மலேசியாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய தோள் நோய் சிகிச்சை மருத்துவ நிபுணர்களில் டாக்டர் நாதன் முன்னணி மருத்துவராக திகழ்ந்தார்.