பினாங்கின் அடுத்த முதலமைச்சராக ஸ்டீவன் சிம் கோடிகாட்டப்பட்டுள்ளார்

ஜார்ஜ் டவுன், செப்டம்பர் 23-

பினாங்கு மாநில டிஏபி -யின் புதிய தலைவராக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது மூலம் அந்த மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக அவர் கோடிகாட்டப்பட்டுள்ளார்.

புக்கிட் மெர்தாஜம் எம்.பி.யான ஸ்டீவன் சிம், பினாங்கு முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவதற்கு ஏதுவாக அடுத்த பொதுத் தேர்தலில் அவர் சட்டமன்றத்திற்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தை டிஏபி தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றியது மூலம் மாநிலத்தின் மூன்றாவது முதலமைச்சராக ஸ்டீவன் சிம் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது.

தற்போது பினாங்கு மாநில முதலமைச்சராக பதவி வகித்து வரும் சௌ கோன் இயோவ் , நேற்று நடைபெற்ற மாநில டிஏபி தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும் மாநில முதலமைச்சராக தனது தவணைக்காலம் முடியும் வரையில் அவர் பொறுப்பில் இருப்பார் என்று DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக் அறிவித்து இருந்தார்.

நேற்று நடைபெற்ற தேர்தலில் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் ராம் கர்ப்பால் சிங், அதிக வாக்குகள் பெற்று முதல் நிலைக்கு தேர்வு செய்யப்பட்டார்த. ராம் கர்ப்பாலுக்கு 1,247 வாக்குகள் கிடைத்தன. இரண்டாவது இடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஸ்டீவன் சிம் – மிற்கு 1,237 வாக்குகள் கிடைந்தன.

பினாங்கு மாநில டிஏபி-யின் புதிய தலைவராக ஸ்டீவன் சிம் -மும், துணைத் தலைவராக ராம் கர்ப்பால் சிங்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

WATCH OUR LATEST NEWS