பாதாளத்தில் டெங்கர் லோரி விழுந்தது: ஆடவர் பலி

லஹாட் டத்து ,செப்டம்பர் 23-

சபா, லஹத் டத்து- வில் டெங்கர் லோரி ஒன்று, 10 meter ஆழத்திலான பாதாளத்தில் விழுந்ததில் ஆடவர் ஒருவர் மண்ணில் புதையுண்டு மாண்டார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஜாலான் சண்டகன் – லஹத் டத்து – வில் 18 மைலில் நிகழ்ந்தது. இச்சம்பவம் தொடர்பில் காலை 2.42 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக லஹாட் டத்து தீயணைப்பு மீட்பு படை நிலையத்தின் தலைவர் டத்து சும்சோவா ரஷித் தெரிவித்தார்.

லஹாட் டத்து – விலிருந்து 29 கிலோமீட்டர் தூரத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் மீட்புப்பணிக்கு 10 வீரர்கள் அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதில் அப்துல் ஹலீம் போலோங் என்று அடையாளம் கூறப்பட்ட 72 வயது நபர் மண்ணில் புதையுண்டார். அவரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் சுமார் 10 மணி நேரம் கடுமையாக போராடியதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS