குத்தகையாளர் மீது கொலை குற்றச்சாட்டு

கங்கர் ,செப்டம்பர் 23-

மோட்டோ3 மற்றும் தேசிய கப் பிரிக்ஸ் மோட்டார் சைக்கிள் பந்தய முன்னாள் வீரர் எல்லி இட்ஜிலியானிசர் இலியாஸ் – ஸை கொன்றதாக குத்தகையாளர் ஒருவர், கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

இப்ராஹிம் ஜோஹன் என்ற 51 வயதுடைய அந்த நபர், மாஜிஸ்திரேட் அனா ரோசானா முகமது நூர் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. இவ்வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால், அந்த நபரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி 10.30 மணியளவில் கங்கார், தாமன் பெஹோர் கோஞ்சர் ஜயா- சாலை சந்திப்பில் 40 வயது எல்லி இட்ஜிலியானிசர் இலியாஸ்- ஸை கொன்றதாக அந்த குத்தகையாளர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த குத்தகையாளர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS