மலாக்கா,செப்டம்பர் 23-
கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் நிர்வாணக் கோலத்தில் நபர் ஒருவரின் சடலம் மலாக் கா, கிளேபாங்-கில் கண்டு பிடிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காணொளியில் கூறப்படும் தகவலை போலீசார் இன்று மறுத்துள்ளனர்.
71 வயது நபர் ஒருவர் இறந்திருப்பது உண்மையே. ஆனால், அவர் மாரடைப்பினால் இறந்துள்ளார். அவரின் இறப்பு, திடீர் மரணம் என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளதாக மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்தார்.
நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் அந்த காணொளி வைரலாகுவதற்கு முன்பு, கடந்த புதன்கிழமை மாலை 6.20 மணியளவில் மலாக்கா, பாண்டாய் ஐ ஆன், கடலோரப்பகுதியில் ஒரு திறந்த வெளியில் நபர் ஒருவர் சுயநினைவிற்றி கிடப்பதாக போலீசார் புகார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த நபரில் உடலில் நடத்தப்பட்ட சோதனையில் அவர் இறப்பில் குற்றத்தன்மை அம்சம் எதுவுமில்லை என்று கண்டறியப்பட்டதாக கிறிஸ்டோபர் பாட்டிட் தெரிவித்தார்.
உண்மைக்கு புறம்பான தகவலை பகிர வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட தரப்பினரை அவர் கேட்டுக்கொண்டார்.