குளுவாங் , செப்டம்பர் 23-
வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்ற இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றி, கிட்டத்தட்டட 50 விழுக்காடாக கணிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் DAP துணைத் தலைவர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
வாக்களிப்பு தினத்தன்று, அதிகமானோர் திரண்டு வந்து, பாரிசான் நேஷனல் வேட்பாளர்சையத் ஹுசைன் சையத் அப்துல்லா- விற்கு வாக்களிப்பார்களேயானால், இந்த முடிவு சீர்ப்படுத்தப்படலாம் என்று அவர் அவர் குறிப்பிட்டார்.
பாரிசான் நேஷனல் வெற்றி வாய்ப்பு, 50 க்கு 50 க்கு என்ற நிலையிலேயே இருப்பதால், அதன் வெற்றியை உறுதி செய்வதற்கு விவேகத்துடன் திரளாக வந்து வாக்களிக்க வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாக தொடர்புத்துறை துணை அமைச்சரான தியோ நீ சிங் தெரிவித்தார்.
மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி, பாரிசான் நேஷனல் வெற்றிப்பெற்றத் தொகுதி என்றாலும் அதன் வெற்றிக்காக முழு வீச்சில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.