குவாந்தன்,செப்டம்பர் 23-
கடந்த வாரம் புதன்கிழமை சுங்கை பூலோ மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்ற கைதி கலைக்குமார் ஆனந்தன், குவந்தான் பேருந்து நிலையத்தில் பிடிபட்டார்.
பொது மக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் பகாங், Kuantan Rapid Bus Terminal நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக சிறைச்சாலை இலாகா தெரிவித்தது.
சுங்கை பூலோ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த கலைகுமார், காதில் இரத்தக் கசிவைத் தொடர்ந்து சுங்கை பூலோ மருத்துவமனையில் சிறைவார்டர் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்று வந்த போது தப்பிச்சென்றுள்ளார்.
அவருக்கு எட்டு குற்றப்பதிவுகள் உள்ளன. புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்த கைதி, தற்போது போலீஸ் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவர் தப்பிச்சென்றதில் சிறை வார்டர்களின் கவனக்குறைவு இருக்குமானல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைச்சாலை இலாகா அறிவித்துள்ளது.