செரம்பன் ,செப்டம்பர் 23-
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இம்மாதம் வரை நடத்தப்பட்ட மூன்று வெவ்வேறு சோதனை நடவடிக்கையில் 49 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சிகரெட் மற்றும் மதுபான கடத்தலை நெகிரி செம்பிலான் சுங்கத்துறை வெற்றிகரமான முறியடித்துள்ளது.
சிலாங்கூர் , ஜெஞ்சரோம்- மில் உள்ள ஒரு வீடமைப்புப்பகுதியில் போலி பதிவு எண்ணைக்கொண்ட ஒரு ISUZU ரக லோரியை சுங்கத்துறை அமலாக்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.
அதில் ஐந்து ஆயிரத்து 280 பீர் டின்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அதே ஜெஞ்சரோம் பகுதியில் ஒரு கொள்கலன் லோரியை சோதனை செய்ததில் 26 ஆயிரத்து 328 பீர் டின்கள் கைப்பற்றப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில சுங்கத்துறை இயக்குநர் முஹம்மது இலியாஸ் குவீக் அப்துல்லா தெரிவித்தார்.