உடற்பயிற்சி ஆசிரியரின் தண்டனை நிலைநிறுத்தப்பட்டது

புத்ராஜெயா,செப்டம்பர் 23-

தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகளை கட்டித்தழுவி, ஆபாச சேட்டைப்புரிந்த குற்றத்திற்காக முன்னாள் உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட ஏழு ஆண்டு சிறை மற்றும் பிரம்படித்தண்டனையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியது.

துவான் செம்போக் துவான் புத்தே என்ற 58 வயதுடைய அந்த முன்னாள் ஆசிரியருக்கு கோலத்திரெங்கானு உயர் நீதிமன்றம் விதித்த தண்டனையில் தாங்கள் மனநிறைவு கொள்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ அகமது ஜைதி இப்ராஹிம் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி திரெங்கானு,டுங்குன், ஃபெல்டா ராசாவ் தொடக்கப்பள்ளியில் ஒன்பது வயதுடைய இரண்டு மாணவிகளிடம் சம்பந்தப்பட்ட ஆசிரியர், ஆபாசமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS