துவரன் ,செப்டம்பர் 23-
உள்ளூர் மக்களுக்கு பெரும் மிரட்டலையை ஏற்படுத்தி வந்ததாக நம்பப்படும் ராட்சஷ முதலையை பிடிப்பதற்கு அமைக்கப்பட்ட பொறியில் 3.6 மீட்டர் நீளமுள்ள முதலை சிக்கியது.
சபா, துவரன்- கம்போங் டுங்குன்-னில் பெரிய உடலமைப்பைக்கொண்ட அந்த முதலை நேற்று காலை 11மணியளவில் பிடிபட்டதாக மாநில வனவிலங்கு இலாகாவின் இயக்குநர் Roland Oliver தெரிவித்தார்.
அந்த ராட்சஷ முதலையைப் பிடிப்பதற்கு கோழி இறைச்சி, இரையாக மாட்டப்பட்டு இருந்ததாக அவர் குறிப்பிட்டார். ஆற்றோரத்தில் உள்ள குடியிருப்புப்பகுதியில் அந்த ராட்சஷ முதலை அடிக்கடி தலைக்காட்டி, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக உள்ளூர் மக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து அந்த முதலையை பிடிப்பதற்கு பொறி அமைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.