இலங்கை புதிய அதிபருக்கு அன்வர் வாழ்த்து

கோலாலம்பூர், செப்டம்பர் 23-

இலங்கையின் புதிய அதிபர் அனுரகுமார திஸாநாயக்க – விற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொன்டார்.

இலங்கை அதிபர் தேர்தலில் மக்கள் சக்தி கட்சியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் புதிய அதிபருக்கு பிரதமர் தமது வாழ்த்தை பகிர்ந்து கொண்டார்.

புதிய அதிபரின் தேர்வை தொடர்ந்து மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இரு வழி உறவுகள் வலுப்பெறும் என்று டத்தோஸ்ரீ அன்வார் நம்பிக்கை தெவித்தார்.

“இலங்கையுடனான நட்புறவு விரைவில் புதுப்பிக்கப்பட்டு, மக்களின் நலனை முன்நிறுத்தி ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று புதிய அதிபருக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS